இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்கு  உள்ளானவர்களின்  எண்ணிக்கை  அதிகரிப்பு

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 May, 2015 | 3:30 pm

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

15 வயதிற்குட்பட்ட 75 சிறுவர்கள் உள்ளிட்ட  3000 பேர் வரை  எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அமைச்சின் புள்ளி விபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்களே அதிகளவில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட எச்.ஐ.வி பரிசோதனைகளில் 22, 059 பேர் பங்குபற்றியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாண்டு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் 12 ,434 ஆண்களும் 9,625 பெண்களும் பங்குபற்றியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்