யாழில் 14 வயது மாணவி துஷ்பிரயோகம்: சந்தேகநபர் கைது

யாழில் 14 வயது மாணவி துஷ்பிரயோகம்: சந்தேகநபர் கைது

யாழில் 14 வயது மாணவி துஷ்பிரயோகம்: சந்தேகநபர் கைது

எழுத்தாளர் Bella Dalima

23 May, 2015 | 6:40 pm

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் 14 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மாணவி கடந்த மாதம் 20 ஆம் திகதி சந்தேகநபரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக, 21 ஆம் திகதி தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, சந்தேகபர் நேற்று பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் யாழ். சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து ஜூன் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்