யாழில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடையுத்தரவு

யாழில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடையுத்தரவு

யாழில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடையுத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

23 May, 2015 | 9:10 am

யாழ்ப்பாணத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதை தடுக்கும் வகையில் யாழ். நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் யாழ். நகரில் இன்று முதல் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதற்கு தடைவிதிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

இந்த தடையுத்தரவு யாழ். நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி கொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதிவாதிகளின் பிணை குறித்து எந்தவிதமான ஆர்ப்பாட்டங்களையும் நடத்த முடியாதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான மக்கள் சக்தி அமைப்பின் தலைவருக்கும், யாழ் பெண்கள் அமைப்பின் தலைவிக்கும், வட மாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கும் எதிராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி இவர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கும் பட்சத்தில் அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

கடந்த 20 ஆம் திகதி யாழ். நகரில் ஆர்ப்பாட்டங்கள் சில முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது ஏற்பட்ட அமைதியின்மையின்போது யாழ். நீதவான் நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு சேதம் விளைவிக்கப்பட்டதுடன், அதுதொடர்பில் 130 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்