தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பு

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பு

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பு

எழுத்தாளர் Bella Dalima

23 May, 2015 | 11:36 am

தமிழக முதல்வராக ஜெயலலிதா ஐந்தாவது முறையாக பதவியேற்றுள்ளார்.

ஜெயலலிதாவிற்கு ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கிய பிரம்மாண்ட விழாவில், ஜெயலலிதாவைத் தொடர்ந்து, 28 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.

இந்தப் பதவியேற்பு விழா நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த், சரத்குமார், சிவக்குமார், கார்த்தி, அர்ஜுன் உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்களும் கலந்துகொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்