சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது

சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது

சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

23 May, 2015 | 9:22 am

சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருளை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொதிகளை கொண்டுவரும் சீதுவை பகுதியிலுள்ள நிலையமொன்றில் இந்த போதைப்பொருள் நேற்று மாலை கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் பராக்ரம பஸ்நாயக்க குறிப்பிட்டார்.

ஹஷிஷ் போதைப்பொருள் பொதியை பெற்றுக்கொள்வதற்காக அங்கு வருகைதரவிருந்த பெண் ஒருவர் தொடர்பில் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையில் கைப்பற்றப்பட்டுள்ள அதிகூடிய ஹஷிஷ் போதைப்பொருள் தொகை இதுவாகும் என சுங்கப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் மேலும் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்