சவுதி அரேபிய மசூதியில் தற்கொலைப்படைத் தாக்குதல்: 30 பேர் பலி

சவுதி அரேபிய மசூதியில் தற்கொலைப்படைத் தாக்குதல்: 30 பேர் பலி

சவுதி அரேபிய மசூதியில் தற்கொலைப்படைத் தாக்குதல்: 30 பேர் பலி

எழுத்தாளர் Bella Dalima

23 May, 2015 | 12:08 pm

சவுதி அரேபியாவில் அல்-குவாதிப் நகரில் ஷியா முஸ்லிம்களின் மசூதியில் நேற்று (22) மேற்கொள்ளப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் குவாதிப் மகாணம் அல்-குவாதிப் நகரில் உள்ள இமாம் அலி மசூதியில் தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்த போது இந்த தற்கொலைப்படை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுமார் 150ற்கும் மேற்பட்டோர் தொழுகையில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சவுதி அரேபியாவில் சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ளனர்.

அந்நாட்டில் அல்-குவாதிப் நகரில் ஷியா முஸ்லிம்கள் அதிகம் வாழ்கின்றனர். அவர்களைக் குறிவைத்து சன்னி பிரிவைச் சேர்ந்த தீவிரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்