கடனட்டை மோசடி தொடர்பில் பம்பலப்பிட்டியில் ஒருவர் கைது

கடனட்டை மோசடி தொடர்பில் பம்பலப்பிட்டியில் ஒருவர் கைது

கடனட்டை மோசடி தொடர்பில் பம்பலப்பிட்டியில் ஒருவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

23 May, 2015 | 3:12 pm

பாரியளவிலான கடனட்டை மோசடியுடன் தொடர்புடைய ஒருவர் பம்பலப்பிட்டி பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தனியார் வங்கியொன்றினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து, சந்தேகநபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

ஏனையோரின் தன்னியக்க இலத்திரனியல் அட்டைகளின் தரவுகளைப் பெற்று, இணையத்தளம் ஊடாக பணப்பரிசு சீட்டுகளை கனடாவிலுள்ள தமது நண்பர் ஒருவர் ஊடாக சந்தேகநபர் கொள்வனவு செய்துள்ளார்.

இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட ஐயாயிரம் ரூபா பெறுமதியான 16 பணப்பரிசு சீட்டுகளையும் பெற்றுக்கொள்வதற்காக பம்பலப்பிட்டி பகுதியிலுள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றிற்கு சென்றிருந்தபோது, இரகசிய பொலிஸாரால் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இந்த நபர் 1895 அமெரிக்க டொலர்களை மோசடி செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாணைகளில் தெரியவந்துள்ளது.

புதுக்கடை நீதவான் முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்