கசகஸ்தானில் சுமார் 85,000 அரிய வகை மான்கள் உயிரிழப்பு

கசகஸ்தானில் சுமார் 85,000 அரிய வகை மான்கள் உயிரிழப்பு

கசகஸ்தானில் சுமார் 85,000 அரிய வகை மான்கள் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

23 May, 2015 | 5:36 pm

கசகஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களில் மட்டும், அழிவின் விளிம்பில் இருக்கும் சைகா வகை மான்கள் மூன்றில் ஒரு பகுதி அளவுக்கு, மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் 85,000 அளவுக்கு சைகா வகை மான்கள், பாக்டீரியா தொற்றால் உயிரிழந்திருக்கலாம் என விவசாய அமைச்சகம் கூறியுள்ளது.

இந்தக் கொள்ளை நோய் குறித்து ஆய்வு செய்வதற்காக பன்னாட்டு மிருக வைத்தியர்கள் கசகஸ்தானுக்கு விரைந்துள்ளனர்.

அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த அபூர்வ வகை மானினம் கடந்த 1990களில் சட்ட விரோத வேட்டை காரணமாக வெகுவாகக் குறைந்து போயின.

குறித்த மானினத்தை பெருக்க அரசு நடவடிக்கைகளை எடுத்துவரும் வேளையில், நோயின் காரணமாக ஏராளமான மான்கள் உயிரிழந்துள்ளது அரசின் முன்னெடுப்புகளுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

தற்போது அந்த மான்கள் பெருமளவில் வாழும் வடக்கு கசகஸ்தானிலுள்ள அமன்கெல்டி மாகாணத்தின் ஜோலோபாப் பகுதியில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தகவல் – பிபிசி


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்