இரண்டாம் உலகப் போரில் வெடிக்காத 50 கி.கி வெடிகுண்டு: செயலிழக்க வைக்க முயற்சி

இரண்டாம் உலகப் போரில் வெடிக்காத 50 கி.கி வெடிகுண்டு: செயலிழக்க வைக்க முயற்சி

இரண்டாம் உலகப் போரில் வெடிக்காத 50 கி.கி வெடிகுண்டு: செயலிழக்க வைக்க முயற்சி

எழுத்தாளர் Bella Dalima

23 May, 2015 | 12:57 pm

இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட 50 கிலோகிராம் எடைகொண்ட வெடிகுண்டு லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வடமேற்கு லண்டனில் உள்ள வெம்ப்ளே பகுதியில் பிரபலமான வெம்ப்ளே கால்பந்து மைதானம் உள்ளது.

இதனருகே கட்டுமானப் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டைப் பரிசோதனை செய்த பொலிஸார், அது இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிக்காத குண்டு என கண்டறிந்துள்ளனர்.

50 கிலோகிராம் எடைகொண்ட அந்தக் குண்டை செயலிழக்க வைக்கும் வேலையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் 400 மீட்டர் சுற்றளவில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Wembley-bomb _83160394_34bda536-259e-4590-9af0-ad3fc8dec702 _83171127_hi027330542


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்