மிகவும் சந்தைப்படுத்தப்பட்ட விளையாட்டு வீரர் பட்டியல் : 6 ஆவது இடத்தில் விராட் கோஹ்லி

மிகவும் சந்தைப்படுத்தப்பட்ட விளையாட்டு வீரர் பட்டியல் : 6 ஆவது இடத்தில் விராட் கோஹ்லி

மிகவும் சந்தைப்படுத்தப்பட்ட விளையாட்டு வீரர் பட்டியல் : 6 ஆவது இடத்தில் விராட் கோஹ்லி

எழுத்தாளர் Bella Dalima

22 May, 2015 | 5:09 pm

பிரித்தானியாவின் விளையாட்டு வணிகப் பத்திரிகையான SportsPro வெளியிட்டுள்ள இவ்வாண்டிற்கான மிகவும் சந்தைப்படுத்தப்பட்ட விளையாட்டு வீரர் பட்டியலில் (most marketable athlete)விராட் கோஹ்லி 6 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இவர் கடந்த ஆண்டு, இப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தார்.

50 வீரர்களை உள்ளடக்கிய இப்பட்டியலில் 21 வயதான கனடாவின் டென்னிஸ் வீராங்கனை யூஜின் பவுச்சர்ட் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

பிரேசிலின் கால்பந்து விளையாட்டு வீரரான நெய்மர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள அதேவேளை, அமெரிக்காவின் கோல்ப் வீரர் ஜோர்தான் ஸ்பீத் மூன்றாவது இடத்தையும் மற்றுமொரு அமெரிக்கரான நீச்சல் வீரர் மிஸி ப்ராங்க்ளின் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த ஆண்டு முதலாவது இடத்தைப் பிடித்திருந்த பார்முலா வன் ட்ரைவர் லூயிஸ் ஹமில்டன் 5 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

ஏழாவது இடத்தில் அமெரிக்க கூடைப்பந்து வீரர் ஸ்டீபன் கரியும் எட்டாவது இடத்தில் ஜப்பானின் டென்னிஸ் வீரர் கெய் நிஷிகொரியும் ஒன்பதாவது இடத்தில் பிரிட்டனின் கெத்ரினா ஜோன்சனும் உள்ளனர்.

இந்தப்பட்டியலில் பத்தாவது இடத்தைத்தான் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்டால் தக்கவைத்துக்கொள்ள முடிந்துள்ளது.

வயது, உள்நாட்டு வர்த்தகம், கவர்ச்சி போன்ற சில விடயங்களை உள்ளடக்கி இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்