ஹொலிவுட்டில் நடிக்கிறார் தனுஷ்?

ஹொலிவுட்டில் நடிக்கிறார் தனுஷ்?

ஹொலிவுட்டில் நடிக்கிறார் தனுஷ்?

எழுத்தாளர் Staff Writer

21 May, 2015 | 11:53 am

தனுஷ் தனது திறமையால் சிறிது காலங்களிலேயே புகழின் உச்சிக்கு சென்றவர்.

இவர் நடிப்பது மட்டுமில்லாது, பாடுவது, பாடல் எழுதுவது, தயாரிப்பது என பல வேலைகளை செய்து வருகிறார்.

கேன்ஸ் பட விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது அதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்தகொண்டனர்.

அந்த விழாவில் பேசிய பிரபல தயாரிப்பாளரான மார்ஜனே சத்ரபி, அவருடைய அடுத்த படத்தின் தகவலை வெளியிட்டிருந்தார்.

அப்போது அவர், Romain Puertolas உடைய  நாவலை தழுவி ஒரு புதிய படம் உருவாக இருக்கிறது. அதில் முக்கிய வேடமான Fakir கதாப்பாத்திரத்தில் நடிக்க தென்னிந்திய நடிகர் தனுஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்