’36 வயதினிலே’ படம் பார்த்ததினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள்

’36 வயதினிலே’ படம் பார்த்ததினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள்

’36 வயதினிலே’ படம் பார்த்ததினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள்

எழுத்தாளர் Staff Writer

20 May, 2015 | 11:01 am

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் விசாரணைக் கைதி ஒருவரை, கைவிலங்குடன் திரைப்படம் பார்க்க அழைத்துச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் நான்கு பேர் பதவி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்களைத் திருடுபவராகக் கருதப்படும் ஒருவரை அம்மாவட்ட பொலிஸார் சனிக்கிழமையன்று கைதுசெய்தனர்.

அந்த நபரை வைத்து மேலும் ஒருவரை அடுத்த நாள் காலையில் கைதுசெய்ய பொலிஸார் முடிவுசெய்திருந்தனர்.

இதன் காரணமாக, அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவில்லை.

இரவில் கைதிகள் எவரையும் பொலிஸ் நிலையத்தில் வைக்கக்கூடாது என கூறப்பட்டிருப்பதால், இரவில் அந்தக் கைதியையும் ஏற்றிக்கொண்டு, ரோந்து வாகனத்தில் காவல்துறையினர் வலம் வந்தனர்.

ரோந்து செல்லும் வழியில் ஒரு திரையரங்கில் 36 வயதினிலே என்ற புதிய தமிழ்த் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது, இதையடுத்து ஆய்வாளர் ராஜேந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் அழகேசன், தலைமைக் காவலர் ஞானப்பிரகாசம், வாகன ஓட்டுனர் ராமச்சந்திரன் ஆகிய மூவரும், விசாரணைக் கைதியுடன் படம் பார்த்துள்ளனர்.

அப்போது அந்த விசாரணைக் கைதி கைவிலங்கிடப்பட்டிருந்தார் கை விலங்குடன் ஒருவர் திரைப்படம் பார்ப்பதைக் கண்ட பொதுமக்கள் தொலைப்பேசி மூலம் தகவலைப் பரப்பினர்.

இத்தகவல் விழுப்புரம் மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் நரேந்திர நாயருக்குக் கிடைத்தவுடன் பொலிஸார் நான்கு பேரும் ஆயுதப் படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

அதன் பிறகு நடந்த விசாரணையின் முடிவில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்