​நேற்றைய ஐபிஎல் போட்டியின் சாதனைத் துளிகள்

​நேற்றைய ஐபிஎல் போட்டியின் சாதனைத் துளிகள்

​நேற்றைய ஐபிஎல் போட்டியின் சாதனைத் துளிகள்

எழுத்தாளர் Staff Writer

20 May, 2015 | 8:33 am

  • நேற்றைய போட்டி தோனி தலைமைத்துவம் வகித்த 200 ஆவது போட்டியாகும். இதுவரை சென்னை அணிக்காக ஐபிஎல் இல் 127 போட்டிகளிலும், இந்திய அணிக்காக 49 போட்டிகளிலும் மற்றும் சென்னை அணிக்காக சம்பியன்ஸ் லீக்கில் 23 போட்டிகளிலும் தலைமையேற்றுள்ளார்.
  • நேற்றைய தினம் தோனி எல்பி முறையில் ஆட்டமிழந்தார். இவ்வகையில் ஐபிஎல் போட்டிகளில் இவர் ஆட்டடமிழப்பது இது இரண்டாவது முறையாகும். அத்துடன் 112 இனிங்ஸ்களின் பின்னரே இவ்வகையாக ஆட்டமிழந்துள்ளார்.
  • நேற்றைய தினம் ஆட்டநாயகன் விருதினைப் பெற்றதன் மூலமாக பொலார்ட் ஐபிஎல் வரலாற்றில் அதிகளவான ஆட்டநாயகன் விருதினைப் பெற்றுக்கொண்டவர் எனும் சாதனையை சச்சினுடன் பகிர்ந்து கொண்டார்.
  • நேற்றைய அரைச்சத்துடன் ஒரு ஐபிஎல் தொடரில் அதிக அரைச்சதம்(5) பெற்றவர் எனும் சச்சினின் சாதனையை சமப்படுத்தினார்.
  • மும்பை இந்தியன்ஸ் அணியானது 3 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
  • நேற்றைய தினம் தோனி ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். ஐபிஎல் வரலாற்றில் இது இவரது இரண்டாவது கோல்டன் டக் ஆகும்.
  • நேற்றைய தினம் பிராவோ ஐபிஎல் இல் 1000 ஓட்டங்களையும் 100 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய ஒரே ஒரு வீரர் எனும் சாதனையைப் படைத்தார். .

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்