முகேஷ் அம்பானியின் காருக்கு பதிவுக் கட்டணம் ரூ.1.6 கோடி

முகேஷ் அம்பானியின் காருக்கு பதிவுக் கட்டணம் ரூ.1.6 கோடி

முகேஷ் அம்பானியின் காருக்கு பதிவுக் கட்டணம் ரூ.1.6 கோடி

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2015 | 4:09 pm

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் காரை ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 1.6 கோடி கட்டணம் செலுத்தி பதிவு செய்துள்ளது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும், பிரபல தொழிலதிபருமான முகேஷ் அம்பானியில் காரை அந்த நிறுவனம் மகாராஷ்டிரா போக்குவரத்து துறையில் ரூ. 1.6 கோடி கட்டணம் செலுத்தி பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிரா போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறுகையில், முகேஷ் அம்பானி புதிதாக ரூ. 1.6 கோடிக்கு BMW காரை வாங்கியுள்ளார். வாகன விலையில் 20 சதவீதத்தை நாங்கள் பதிவுக் கட்டணமாக வசூலிக்கிறோம். ஆனால், கட்டணம் அதிகமாகக் காணப்படுவதற்கு அதன் இயல்பான விலை மட்டும் காரணமல்ல. அதில் பல்வேறு மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. அவரது காரின் உண்மையான விலை ரூ. 1.6 கோடியாக இருந்த போதிலும் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு உள்ளதால் காரை முழுக்க முழுக்க குண்டு துளைக்காத காராக மாற்ற வேண்டியிருந்தது.

இதற்காக ஜெர்மனியில் உள்ள BMW நிறுவனத்திடம் தெரிவித்து இதனைத் தயார் செய்தனர். பின்னர் இறக்குமதி வரியாக 300 சதவீதத்தை சேர்த்து காரின் தற்போதைய மதிப்பு ரூ. 8.5 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அதற்கு பதிவுக்கட்டணமாக ரூ. 1.6 கோடியை கட்ட வேண்டியிருந்தது. எனவே தான் பதிவுக் கட்டணம் மிகவும் அதிகமாகத் தெரிகிறது, என்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்