மணமகளுக்கு தாலி கட்ட முயன்ற சுப்ரமணியன் சுவாமி: திருமண மண்டபத்தில் பரபரப்பு (VIDEO)

மணமகளுக்கு தாலி கட்ட முயன்ற சுப்ரமணியன் சுவாமி: திருமண மண்டபத்தில் பரபரப்பு (VIDEO)

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2015 | 5:17 pm

திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த அழைக்கப்பட்டிருந்த பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, மணமகளுக்கு தாலிகட்ட முயன்றதால், அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

கோவிலில் நடைபெற்ற திருமண விழாவுக்கு வந்திருந்த பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியிடம், குருக்கள் தாலியை வாழ்த்திக்கொடுக்குமாறு கூறினார்.

சுப்ரமணியன் சுவாமியும், தாலியை மிகுந்த பக்தியுடன் பெற்று அதனை வைத்து பிரார்த்தித்தார். பிறகு தாலியை மாப்பிள்ளையிடம் கொடுப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், அதனை எதிரே நின்றிருந்த மணமகளின் கழுத்தில் கட்டச் சென்றார்.

இதனைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து போக, சுதாகரித்துக் கொண்ட சந்திரலேகா, சுப்ரமணியன் சுவாமியின் கையைத் தட்டி, மாப்பிள்ளையிடம் தாலியைக் கொடுக்குமாறு அதட்டினார்.

அப்போதுதான் சூழ்நிலையை உணர்ந்தது போல் சுப்ரமணியன் சுவாமியும் தாலியை மணமகனிடம் கொடுத்தார்.

அதன் பிறகு மணமகன் தாலியை மணப்பெண்ணின் கழத்தில் கட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்