பொகவந்தலாவயில் ஆசிரியர் கத்தியால் குத்திக் கொலை

பொகவந்தலாவயில் ஆசிரியர் கத்தியால் குத்திக் கொலை

பொகவந்தலாவயில் ஆசிரியர் கத்தியால் குத்திக் கொலை

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2015 | 7:22 pm

பொகவந்தலாவ, ஆரியபுர பிரதேசத்தில் ஆசிரியர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபரின் சகோதரரின் வர்த்தக நிலையத்தில் பணிபுரிந்த இளைஞர் ஒருவரே இந்தக் கொலையை மேற்கொண்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொகவந்தலாவ, பொகவன தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய 46 வயதான நவனீதரன் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் கடமைகளை முடித்து வீடு திரும்பிய அவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களையும் மீட்டுள்ளனர்.

சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலப்பிட்டியிலுள்ள மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்