புங்குடுதீவு மாணவியின் கொடூரக் கொலைக்கு ஜே.ஶ்ரீரங்கா கண்டனம்

புங்குடுதீவு மாணவியின் கொடூரக் கொலைக்கு ஜே.ஶ்ரீரங்கா கண்டனம்

புங்குடுதீவு மாணவியின் கொடூரக் கொலைக்கு ஜே.ஶ்ரீரங்கா கண்டனம்

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2015 | 9:07 pm

புங்குடுதீவு பாடசாலை மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டிப்பதாக பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஶ்ரீரங்கா தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் ஏற்படாத வகையில் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது வடக்கில் திட்டமிட்ட வகையில் சமூக சீர்கேடுகளும் கலாசார சீர்கேடுகளும் இடம்பெற்ற போது வடக்கில் இருந்த அமைச்சர்கள் மௌனமாக இருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஶ்ரீரங்கா தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடக்கின் தமிழ் அமைச்சர்கள் அதற்கு துணைபோனதாகவும் அதன் விளைவுகளை இன்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நல்லாட்சி ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் அதற்கு உறுதுணையாக இருந்த தமிழ் மக்களுக்கு இன்றும் அதே அவலம் தொடர்வது குறித்து தாம் கவலையடைவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஶ்ரீரங்கா குறிப்பிட்டுள்ளார்.

எனவே, நல்லாட்சிக்கு வழிவகுத்துள்ள தமிழ் மக்கள் இன்று மீண்டும் வீதியில் இறங்கிப் போராட வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

30 வருட யுத்தம் காரணமாக அனைத்தையும் இழந்து தவிக்கும் தமிழ் மக்களுக்கு மேலும் வேதனைகள் ஏற்படாத வகையில் செயற்படும் பாரிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என்பதனை மறந்துவிடக் கூடாது எனவும் பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஶ்ரீரங்கா தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்