பாராளுமன்றத்தை அண்மித்த வீதிகளில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம்

பாராளுமன்றத்தை அண்மித்த வீதிகளில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம்

பாராளுமன்றத்தை அண்மித்த வீதிகளில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

20 May, 2015 | 8:50 am

இராணுவ ஞாபகார்த்த விழாவை முன்னிட்டு பாராளுமன்றத்தை அண்மித்த வீதிகளில் இன்று (20) விசேட போக்குவரத்துத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்று (20) பிற்பகல் ஒரு மணி முதல் மாலை ஏழு மணிவரை இந்த விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறையில் இருக்கும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதற்கமைய குறித்த காலப் பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாராளுமன்ற மைதானத்தில் அமைந்துள்ள இராணுவ நினைவி தூபிக்கு அருகில் இன்று (20) பிற்பகல் இராணுவ ஞாபகார்த்த விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்