தௌ்ளுப்பூச்சி பரவலால் பாடசாலை மூடப்பட்டது

தௌ்ளுப்பூச்சி பரவலால் பாடசாலை மூடப்பட்டது

தௌ்ளுப்பூச்சி பரவலால் பாடசாலை மூடப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2015 | 4:50 pm

மாணவிகள் சிலரை தெள்ளுப்பூச்சி கடித்ததால், ஹட்டன் புனித கப்ரியல் மகளிர் வித்தியாலயம் இன்று அவசரமாக மூடப்பட்டது.

பாடசாலைக்கு இன்று சமூகமளித்த மாணவிகள் நால்வரை தெள்ளுப்பூச்சி கடித்தமை கண்டறியப்பட்டதன் காரணமாக, முற்பகல் 11 மணியளவில் பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து மேற்கொண்ட சோதனையின்போது பாடசாலையில் தெள்ளுப்பூச்சிகள் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

தெள்ளுப்பூச்சிகளை அழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் அதுகுறித்து ஹட்டன் – டிக்கோயா சுகாதார பரிசோதகர்களுக்கு பாடசாலை நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்