திருமாவளவனின் தனிப்பட்ட செயலாளர் வெட்டிக் கொலை

திருமாவளவனின் தனிப்பட்ட செயலாளர் வெட்டிக் கொலை

திருமாவளவனின் தனிப்பட்ட செயலாளர் வெட்டிக் கொலை

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2015 | 3:48 pm

விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வெற்றிச்செல்வன் என்பவர் இன்று காலை சென்னை மடிப்பாக்கத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்தவர் வெற்றிச்செல்வன். அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் தனிப்பட்ட செயலாளராகவும் இருந்தார்.

அவரை மடிப்பாக்கத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலை தொடர்பிலான விசாரணைகளைப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்