சம்பூரில் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

சம்பூரில் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

சம்பூரில் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2015 | 10:17 pm

சம்பூரில் மீளக்குடியமர்த்துமாறு வலியுறுத்தி, கிளிவெட்டி மற்றும் சம்பூர் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

சம்பூர் பகுதியில் மக்கள் மீள்குடியேறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீக்கப்பட்டதையடுத்து உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.​

தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலத்தை முதலீட்டுச் சபை தடுத்து நிறுத்த வேண்டும் என 2012 ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும், முதலீட்டுச் சபை தங்களுக்கு வழங்கிய நிலத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் என குறித்த தனியார் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த தனியார் நிறுவனத்தினால் பெறப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு இன்று நீக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்