ஒற்றுமைப் பயணம் நாளை நாத்தாண்டி செல்லவுள்ளது

ஒற்றுமைப் பயணம் நாளை நாத்தாண்டி செல்லவுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2015 | 10:10 pm

அனைத்து இன மக்களின் பிரதிநிதித்துவம் காணப்படும் புத்தளம் நகரில் இருந்து 13 ஆவது நாளான இன்று தேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமைப் பயணத்தின் வாகனத்தொடரணி பயணத்தை ஆரம்பித்தது.

வாகனத் தொடரணி பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வில் இளைஞர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா கலந்துகொண்டார்.

புத்தளம் மாவட்டத்தின் பாடசாலை மாணவ மாணவிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன்போது புத்தளம் சிரம்பியடிவ பிரதேசத்தில் வாழும் ஆப்பிரிக்க சமூகத்தைப் பின்னணியாகக் கொண்ட இனத்தின் கலை நிகழ்வு அனைவரினதும் கவனத்தை ஈர்த்தது.

புத்தளத்தில் பயணத்தை ஆரம்பித்த வாகனத் தொடரணி இன்று முற்பகல் மதுரங்குளி நகரை வந்தடைந்தது.

மதுரங்குளி மக்கள் தமது பிரதேசத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் சின்னத்தை வாகனத் தொடரணியின் விஷேட பீடத்தில் வைத்தனர்.

தேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமைப் பயணத்தின் 39 ஆவது நகரமான ஆராச்சிக்கட்டுவையை தொடரணி இன்று பிற்பகல் சென்றடைந்தது. ​

சக்தி, சிரச, நியூஸ்பெஸ்ட், கொழும்பு துறைமுக நகர் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன இணைந்து முன்னெடுக்கும் இந்த வாகனத் தொடரணி நாளை சிலாபம் , மாதம்பே ஊடாக நாத்தாண்டியைச் சென்றடையவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்