19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் அனுமதி

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

15 May, 2015 | 9:47 am

அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் இன்று (15) காலை அனுமதி வழங்கியுள்ளார்.

சபாநாயகர் சமல் ராஜபக்ஸ இன்று (15) காலை 9.10 அளவில் திருத்தச் சட்டத்திற்கு அனுமதி அளித்து கையொப்பமிட்டதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் அரசியலமைப்பு சபை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் அடங்கலாக 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்