வசிம் அக்ரமிடம் பயிற்சி பெற்ற சச்சினின் மகன்

வசிம் அக்ரமிடம் பயிற்சி பெற்ற சச்சினின் மகன்

வசிம் அக்ரமிடம் பயிற்சி பெற்ற சச்சினின் மகன்

எழுத்தாளர் Staff Writer

15 May, 2015 | 10:33 am

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான வசிம் அக்ரம், அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சச்சினுக்கு அர்ஜுன் என்ற மகன் இருப்பது அனைவரும் அறிந்த செய்திதான்.

தந்தையை போலவே கிரிக்கெட் உலகில் தானும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அர்ஜுன் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து பந்துவீச்சாளரான வசிம் அக்ரமிடம் அர்ஜூன் ஆலோசனைகளை பெற்றுள்ளார்.

இதுகுறித்து வசிம் அக்ரம் நிறுபர்களுக்கு கூறுகையில், இளம் வயதுடைய அர்ஜுன் வேகமாக பந்துவீச மிகவும் விரும்புகிறார், மேலும் பல நுட்பங்களையும் கேட்டு அறிந்து கொண்டார் அர்ஜுனிடம் இருக்கும் இந்த ஆர்வம் மிக நல்ல விடயம் என்று வசிம் அக்ரம் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்