மீளாய்வுக் கலந்துரையாடலில் அர்ஜூன் மஹேந்திரன்: புத்திஜீவிகள் கேள்வி

மீளாய்வுக் கலந்துரையாடலில் அர்ஜூன் மஹேந்திரன்: புத்திஜீவிகள் கேள்வி

எழுத்தாளர் Bella Dalima

15 May, 2015 | 9:51 pm

இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை 2014ற்கு அமைவாக இலங்கையின் பொருளாதாரத்தை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் நேற்று (14) இடம்பெற்றது.

மிகவும் சாதகமான உற்பத்திகளையே இலங்கை உற்பத்தி செய்ய வேண்டும் என இதன்போது மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரன் தெரிவித்தார்.

வங்கித்துறை சார்ந்தவர்கள் உட்பட மத்திய வங்கியின் அதிகாரிகளும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பிலான அறிக்கை பாராளுமன்றில் இன்னும் சமர்ப்பிக்கப்படாத நிலையில் மத்திய வங்கியின் ஆளுநர்
எவ்வாறு மத்திய வங்கியை பிரதிநிதித்துவம் செய்து பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியும் என புத்திஜீவிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்