மட்டக்களப்பில் காட்டு யானையின் அட்டகாசத்தினால் 2 வீடுகளுக்கு சேதம்

மட்டக்களப்பில் காட்டு யானையின் அட்டகாசத்தினால் 2 வீடுகளுக்கு சேதம்

மட்டக்களப்பில் காட்டு யானையின் அட்டகாசத்தினால் 2 வீடுகளுக்கு சேதம்

எழுத்தாளர் Staff Writer

15 May, 2015 | 12:47 pm

மட்டக்களப்பு, பட்டிப்பளை பகுதியில் காட்டு யானையின் அட்டகாசத்தினால் இரண்டு வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

பட்டிப்பளை, கச்சகொடி சுவாமி மலை கிராமத்திற்குள் நேற்றிரவு புகுந்த காட்டு யானை இரண்டு வீடுகளுக்கு சேதம் விளைவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

எனினும், வீட்டில் இருந்த எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இதே கிராமத்திற்குள் காட்டு யானைகளின் அட்டகாசத்தினால், 11 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தின், கிரான், தாந்தாமலை, நாற்பது வட்டை, கரடியனாறு, மரப்பாலம் மற்றும் பன்சேனை ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகளின் தொல்லைகள் அதிகரித்து வருவதாக எமது செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்