பாலியல் இலஞ்சம் கோரிய அதிபருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

பாலியல் இலஞ்சம் கோரிய அதிபருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

பாலியல் இலஞ்சம் கோரிய அதிபருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

எழுத்தாளர் Bella Dalima

15 May, 2015 | 4:19 pm

பிள்ளையைத் தரம் ஒன்றில் சேர்ப்பதற்காகச் சென்ற தாய் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கொட்டாவை பிரதேச பாடசாலை ஒன்றின் அதிபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

வழக்கு விசாரணைகளின்போது குறித்த அதிபர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதற்கமைய, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஐராங்கனி பெரேரா, குற்றவாளிக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 8 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளார்.

அத்தோடு, குற்றவாளிக்கு 20 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கெளரவமான தொழிலில் இருந்துகொண்டு இத்தகைய கீழ்த்தரமான செயற்பாட்டில் ஈடுபட்டமைக்காக இதனைவிட கடும் தண்டனை விதிக்கவேண்டி உள்ள போதிலும் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தைக் கருத்திற்கொண்டே இந்த தண்டனையை விதித்ததாக நீதிபதி கூறியுள்ளார்.

தன்னுடன் ஹோட்டலுக்கு செல்வதற்கு விருப்பமாயின், பிள்ளையை பாடசாலையில் சேர்த்துக்கொள்ள முடியுமென தாயாரிடம் அதிபர் கூறியுள்ளார்.

இதுகுறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்துவிட்டு குறித்த பெண் ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.

இதன்போது, ஹோட்டல் அறைக்குள் இருந்த அதிபர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்