பிலிப்பைன்ஸில் சப்பாத்துத் தொழிற்சாலையில் தீ விபத்து: 72 ​பேர் பலி

பிலிப்பைன்ஸில் சப்பாத்துத் தொழிற்சாலையில் தீ விபத்து: 72 ​பேர் பலி

பிலிப்பைன்ஸில் சப்பாத்துத் தொழிற்சாலையில் தீ விபத்து: 72 ​பேர் பலி

எழுத்தாளர் Bella Dalima

15 May, 2015 | 3:27 pm

பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவில் உள்ள சப்பாத்துத் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் (13) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 72 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.

தொழிலாளர்கள் பலரைக் காணவில்லை என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

மணிலாவில் உள்ள தனியார் சப்பாத்துத் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் (13) நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அங்கு திடீரென ஏற்பட்ட தீ, தொழிற்சாலை முழுவதும் பரவியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்துள்ளனர்.

கடும் போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்த போதிலும், பலர் தீயில் கருகினர்.

தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து 2 ஆவது நாளாக நேற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 72 பேரின் சடலங்களை மீட்டுள்ளனர்.

2 தளங்களைக் கொண்ட அந்த கட்டடத்தில் ஆபத்துக் காலத்தில் அவசரமாக வெளியேறுவதற்கு போதுமான ஏற்பாடுகள் இல்லாததுடன் தீ விபத்தின்போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுவே பலி எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாகி உள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்