நள்ளிரவுடன் 234 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவு

நள்ளிரவுடன் 234 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவு

நள்ளிரவுடன் 234 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவு

எழுத்தாளர் Bella Dalima

15 May, 2015 | 8:09 pm

இன்று நள்ளிரவுடன் 234 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவு பெறுகின்றது.

அதன்பிரகாரம், உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம், நியமிக்கப்படவுள்ள விசேட ஆணையாளர்களுக்கு வழங்கப்படும்.

நாட்டில் செயற்படும் 335 உள்ளூராட்சி மன்றங்களுள் 234 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறுகின்றது.

மேலும், 65 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகப்பூர்வ பதவிக்காலம் ஜூலை 31 ஆம் திகதியுடன் நிறைவு பெறவுள்ளது.

இரண்டு உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஒக்டோபர் 31 ஆம் திகதியுடன் நிறைவு பெறவுள்ளது.

கடந்த மார்ச் 31 ஆம் திகதியுடன் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவு பெற்ற போதிலும், இதன் பதவிக்காலத்தை ஜனாதிபதி இன்று வரை நீடித்ததாக, அரச நிர்வாக மாகாண சபை – உள்ளூராட்சி மன்றம் மற்றும் ஜனநாயக ஆட்சி
தொடர்பான அமைச்சின் செயலாளர் ஜே. தடல்லகே தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்