செவ்வாய்க் கிரகத்தில் நுண்ணுயிர்களைக் கொண்டு ஒட்சிசனை உருவாக்க நாசா திட்டம்

செவ்வாய்க் கிரகத்தில் நுண்ணுயிர்களைக் கொண்டு ஒட்சிசனை உருவாக்க நாசா திட்டம்

செவ்வாய்க் கிரகத்தில் நுண்ணுயிர்களைக் கொண்டு ஒட்சிசனை உருவாக்க நாசா திட்டம்

எழுத்தாளர் Staff Writer

15 May, 2015 | 9:39 am

எதிர்காலத்தில் செவ்வாய்க் கிரகத்துக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் பெரிய பெரிய சிலிண்டர்களில் ஒட்சிசனை அடைத்து எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.

செவ்வாய் கிரகத்திலேயே நுண்ணுயிர்களைக் கொண்டு ஒட்சிசன் உருவாக்கும் திட்டத்தை நாசா தொடங்கியுள்ளது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவைச் சேர்ந்த டெக்‌ஷாட் என்ற நிறுவனத்துடன் இணைந்து செவ்வாய்க் கிரகத்தில் ஒட்சிசன் தயாரிக்கும் ஆராய்ச்சியை மேற்கொள்ள உள்ளதாக www.ign.com இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் படி, சிலிண்டர்களில் ஒட்சிசனை எடுத்துச் செல்வதற்கு பதிலாக நுண்ணுயிர்களைக் கொண்டு செவ்வாய் கிரகத்திலேயே ஒட்சிசன் உருவாக்கப்படும் என்று டெக்‌ஷாட் நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி யூஜின் போலந்த் தெரிவித்துள்ளார்.

செவ்வாய் கிரகத்தில் உள்ள மணலில் நுண்ணுயிர்களைக் கொண்டு சோதனை செய்து, மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான சூழல் அமைப்பை உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கம்.

2030 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்