சீனாவிற்குச் சென்றால் செத்து விளையாடலாம்! (Photos)

சீனாவிற்குச் சென்றால் செத்து விளையாடலாம்! (Photos)

சீனாவிற்குச் சென்றால் செத்து விளையாடலாம்! (Photos)

எழுத்தாளர் Bella Dalima

15 May, 2015 | 3:57 pm

சீனாவில் ”சமாதி 4டி” என்ற விளையாட்டிற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

மனிதர்களுக்கு சாவு குறித்த சிந்தனை எப்பொழுதும் மனதின் ஓரத்தில் இருந்து கொண்டே தான் இருக்கும்.

மரணத்தின் ருசியை மற்றவர்களுக்கு விபரிக்க முற்பட்ட பலருக்கும் தோல்வியே பரிசாகக் கிடைத்திருக்கிறது.

இதனை ஒரு சவாலாகக் கொண்டு சீனாவில் ஒரு கேம் ஷோ நடத்தப்பட்டு வருகிறது.

அதன் பெயர் ”சமாதி 4டி மரண அனுபவம்”

இந்த விளையாட்டு நிகழ்வு (Game Show) நடைபெறும் அரங்கத்தினுள் பேய், பிசாசு முகமூடி அணிந்த மனிதர்கள் ஆங்காங்கே உலாவிக்கொண்டே இருப்பார்கள்.

அது தவிர, வெட்டப்பட்ட கை கால்களைப் போன்ற செயற்கை உறுப்புகள் ஆங்காங்கே தொங்கிக்கொண்டிருக்கும்.

மரணத்தில் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை அடிப்படையாகக் கொண்டு இங்கு போட்டிகள் நடத்தப்படும்.

இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் உண்டு. மாறாக தோல்வி அடைந்தால் செயற்கையான மரண அனுபவம் கிடைக்கும்.

போட்டியில் தோற்றவர்களை சவப்பெட்டியில் வைத்து மூடி விடுவார்கள். பின் வெப்பக்காற்றை உள்ளே செலுத்துவார்கள். நெருப்பு எரிவது போன்ற விளக்கு வெளிச்சமும் பெட்டிக்கு உள்ளே பாய்ச்சப்படும்.

இது தவிர, 4டி முறையில் சில திகில் காட்சிகளையும் பெட்டியில் படுத்திருப்பவர்களுக்குக் காட்டுவார்கள்.

பிறகு மெல்ல மெல்ல மாத்திரை வடிவத்தில் மறுபிறப்பு உருவாகும்.

நல்லவேளை மீண்டும் பிறந்துவிட்டோம் என அப்போது தான் பெட்டியில் படுத்திருப்பவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள்.

அதன்பிறகு, பெட்டியைத் திறந்து அவர்களை வெளியே அனுப்புவார்கள்.

பலர் இந்த மறுபிறப்பு அனுபவத்தை மிகவும் ரசிக்கிறார்களாம். சிலரோ பாதியிலேயே பயத்தில் வெளியேறி விடுகிறார்களாம்.

இந்த விநோதமான, திகிலான விளையாட்டு ஷாங்காயில் படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

 

maxresdefault 1430689005247568

2841_502624_936670 4d-death-simulator-game-2 4-D-Death-Experience-2


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்