ஒற்றுமைப் பயணம் மட்டக்களப்பை அடைந்தது: நாளை அம்பாறை நோக்கிச் செல்கிறது

ஒற்றுமைப் பயணம் மட்டக்களப்பை அடைந்தது: நாளை அம்பாறை நோக்கிச் செல்கிறது

எழுத்தாளர் Bella Dalima

15 May, 2015 | 8:30 pm

நாட்டின் நாலாப்புறங்களையும் இணைத்து சமாதானத்தின் தகவலைக் கொண்டு செல்லும், தேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமைப் பயணம் இன்று மாலை மட்டக்களப்பை அண்மித்தது.

8ஆவது நாளான இன்றைய பயணம் திருகோணமலையில் இருந்து ஆரம்பமானது.

தேசத்தை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன், இன மத பேதங்களின்றி சமாதானத்தின் தகவலுடன், கிராமங்கள் நகரங்கள் தோறும் பயணிக்கும் ஒற்றுமைப் பயணம்
திருகோணமலையில் இன்று ஆரம்பமானது.

இன்றைய பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர், திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் வழிபாடுகள் இடம்பெற்றன.

சிவபெருமானின் ஆசியைப் பெற்றுக்கொண்ட ஒற்றுமைப் பயணம், திருகோணமலை நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபத்தின் பின்னர் இன்றைய நாளுக்கான பயணத்தை ஆரம்பித்தது.

சமாதானத்தைக் கட்டியெழுப்பும் இந்த பயணத்தில் அனைத்து இன மக்களும் கைகோர்த்தனர்.

திருகோணமலை மக்களின் அமோக வரவேற்புக்கு மத்தியில் விடைபெற்ற ஒற்றுமைப் பயணம் வாழைச்சேனையை நோக்கிப் புறப்பட்டது.

மக்களின் மனங்களை இணைக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ள ஒற்றுமைப் பயணம், கிராமங்கள் மற்றும் நகரங்களை இணைக்கும் நாட்டின் நீளமான கிண்ணியா
பாலத்தின் ஊடாக வாழைச்சேனையை அண்மித்தது.

சமாதானம் மற்றும் சகவாழ்வை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் ஒற்றுமைப் பயணத்துடன் வாழைச்சேனை மக்கள் இன்று இணைந்தனர்.

தேசத்தின் ஒற்றுமைக்காக முன்னெடுக்கப்படும் நாட்டின் முதலாவது திட்டமான ஒற்றுமைப் பயணம், மக்களின் வாழ்த்துக்களுக்கு மத்தியில் இன்று மாலை மட்டக்களப்பைச் சென்றடைந்தது.

சக்தி – சிரச – நியூஸ் பெஸ்ட் – கொழும்பு துறைமுக நகரம் மற்றும் தேசிய இளைஞர் சேவை மன்றம் ஆகியன இணைந்து 40 நாட்களுக்கு ஏற்பாடு செய்துள்ள
ஒற்றுமைப் பயணம், கல்முனையில் இருந்து உஹன ஊடாக அம்பாறை நோக்கி நாளைய
தினம் பயணிக்கவுள்ளது.

 

11174783_903842856342640_6230725370419679541_n

11071733_903843923009200_874099981296438430_n 11054839_903843733009219_8082795714465758346_n 11011840_903843893009203_6176979310754664618_n 10985931_903843836342542_6054851310320227016_n 10646801_903843776342548_1974088539664475076_n 10646801_903843103009282_6768932189455928679_n


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்