உமாஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை

உமாஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை

உமாஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

15 May, 2015 | 12:34 pm

உமாஓயா திட்டம் காரணமாக மக்களின் வீடுகள் மற்றும் பயிர்ச் செய்கைகள் என்பவற்றுக்கு பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இழப்பீடுகளை வழங்குவதற்காக 1500 இற்கும் அதிக குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

இழப்பீடுகளை வழங்குவதற்காக உமாஓயா திட்டத்தின் பணிப்பாளருக்கு சுமார் 200 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அமைச்சின் செயலாளர் கூறினார்.

இதேவேளை, இழப்பீடுகளுக்காக செலவாகும் தொகையை உமாஓயா திட்டத்தின் ஒப்பந்த நிறுவனத்திடம் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்