ஹம்பாந்தோட்டை மேயருக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஹம்பாந்தோட்டை மேயருக்கு விளக்கமறியல் நீடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2015 | 6:23 pm

ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோ எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.​

கடந்த வருடம் மார்ச் மாதம் 27 ஆம் திகதி முறைப்பாடொன்றை முன்வைப்பதற்காக அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு வந்த ஒருவரைக் கடத்த முயற்சித்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இதனை அடுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மேயர், விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது எதிர்வரும் 20 ஆம் திகதி வரை, அவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்