வட கொரிய அதிபர்  தலைமையேற்ற பேரணியில் தூங்கிய பாதுகாப்பு உயரதிகாரிக்கு மரணதண்டனை

வட கொரிய அதிபர் தலைமையேற்ற பேரணியில் தூங்கிய பாதுகாப்பு உயரதிகாரிக்கு மரணதண்டனை

வட கொரிய அதிபர் தலைமையேற்ற பேரணியில் தூங்கிய பாதுகாப்பு உயரதிகாரிக்கு மரணதண்டனை

எழுத்தாளர் Staff Writer

13 May, 2015 | 12:03 pm

வட கொரிய பாதுகாப்பு அமைச்சர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தென் கொரிய உளவுத் துறை தெரிவித்துள்ளது.

அதிபர் கிம் ஜோங்கிடம் பணிவாக நடக்காததால் இந்த தண்டனை வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

வட கொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹையோன் யோங் சோலுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தியை தென் கொரிய உளவுத் துறை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

விமானங்களை சுட்டு வீழ்த்தும் துப்பாக்கியால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டது.

தேசத்துரோகம் செய்து விட்டதாக கூறி இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் தண்டனை அளிக்கப்பட்ட ஹையோன் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லாத நிலையில், அதிபர் கிம் ஜோங் உன் தலைமையேற்ற பேரணியில் அவர் முன்னிலையில் சோர்வாக தூங்கியதாக புகார் எழுந்தது.

இந்த மரண தண்டனைக்கு இதுவே காரணமாக கருதப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்