முதலாவது முச்சதம் அடித்த கெவின் பீட்டர்சன்; மீண்டும் அணிக்கு திரும்புவாரா?

முதலாவது முச்சதம் அடித்த கெவின் பீட்டர்சன்; மீண்டும் அணிக்கு திரும்புவாரா?

முதலாவது முச்சதம் அடித்த கெவின் பீட்டர்சன்; மீண்டும் அணிக்கு திரும்புவாரா?

எழுத்தாளர் Staff Writer

13 May, 2015 | 7:30 am

இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் சர்ரே அணிக்காக விளையாடி வரும் கெவின் பீட்டர்சன் லீசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 396 பந்துகளில் 36 பவுண்டரி, 15 சிக்சருடன் 355 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

கெவின் பீட்டர்சன் அடித்த முதல் முச்சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல். போட்டியை புறக்கணித்து விட்டு கவுண்டி போட்டியில் கவனம் செலுத்திய கெவின் பீட்டர்சன் மீண்டும் இங்கிலாந்து அணியில் இடம் பிடிக்கும் நோக்கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அணியில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக அணி நிர்வாகம் இவரை அணியிலிருந்து நீக்கியிருந்தது.

இந்நிலையில் இவர் அடித்த முச்சதமானது இவர் அணிக்கு மீள அழைக்கப்படுவாரா எனும் எதிர்பார்ப்பை அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது.

Score card

 

kevin 2


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்