மலையகத்தின் பல பகுதிகளில் கலாசார மண்டபங்களை அமைக்கும் பா.உ. ஜே.ஸ்ரீரங்கா

மலையகத்தின் பல பகுதிகளில் கலாசார மண்டபங்களை அமைக்கும் பா.உ. ஜே.ஸ்ரீரங்கா

மலையகத்தின் பல பகுதிகளில் கலாசார மண்டபங்களை அமைக்கும் பா.உ. ஜே.ஸ்ரீரங்கா

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2015 | 5:45 pm

பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஸ்ரீரங்காவின் நிதி ஒதுக்கீட்டில் மலையகத்தின் பல பகுதிகளிலும் கலாசார மண்டபங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஹட்டன், வெலி ஓயாவில் அமைக்கப்படும் கலாசார மண்டபங்களைப் பார்வையிட பாராளுமன்ற உறுப்பினர் அங்கு சென்றிருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் வெலி ஓயா கீழ் பிரிவில் இந்த கலாசார மண்டபம் அமைக்கப்படுகின்றது.

விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படவுள்ள இந்த கலாசார மண்டபத்தை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

அதன் பின்னர் வெலி ஓயா UDK பிரிவு தோட்டத்தில் அமைக்கப்படும் கலாசார மண்டபத்தைப் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா பார்வையிட்டார்.

இந்தக் கலாசார மண்டபத்தின் நிர்மாணப் பணிகளைத் தரமான முறையில் மிக விரைவில் நிறைவு செய்யுமாறு இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆலோனை வழங்கியுள்ளார்.

அடிப்படை வசதிகளற்ற வீடுகளில் வாழும் மலையக மக்களின் பொதுத் தேவைகள் மற்றும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள், மேலதிக வகுப்புக்கள், தொழில்சார் பயிற்சிகள் என்பவற்றை மேற்கொள்ளும் நோக்கில் இந்த கலாசார மண்டபங்கள் அவர்களிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]rst.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்