மத்திய வங்கி முறிகள் விநியோகம்: மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் நிராகரிப்பு

மத்திய வங்கி முறிகள் விநியோகம்: மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் நிராகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2015 | 7:59 pm

சர்ச்சையைத் தோற்றுவித்த மத்திய வங்கி முறிகள் விநியோகம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர்நீதிமன்றத்தினால் இன்று நிராகரிக்கப்பட்டது.

பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன், ரோஹினி மாரசிங்க, பிரியசாத் டெப் ஆகியோர் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மத்திய வங்கியின் ஒரு பில்லியன் ருபா பெறுமதியான முறிகள் விற்பனை செய்யப்படும் என்று பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்ட பின்னர் அதை 10 பில்லியன் வரை அதிகரித்துள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதிகரிக்கப்படுவது குறித்து மக்களுக்கு அறிவிக்கப்படாது, ஒரு நிறுவனத்திற்கு மாத்திரம் அதிக இலாபத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் முறிகள் விநியோகிக்கப்பட்டமை சட்டவிரோதமானது என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இருதரப்பு சட்டத்தரணிகளினதும் கருத்துக்களை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது சட்டத்திற்கு அமைவானது அல்ல என தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்