பாகிஸ்தான் பேருந்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 41 பேர் பலி

பாகிஸ்தான் பேருந்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 41 பேர் பலி

பாகிஸ்தான் பேருந்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 41 பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

13 May, 2015 | 12:20 pm

பாகிஸ்தானின் கராச்சி நகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 41 பேர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் சஃபூரா சவுக் அருகே சென்று கொண்டிருந்த பேருந்து மீது இரு சக்கர வாகனத்தில் வந்த சில அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில், அப்பாவி பொதுமக்கள் 43 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். பலர் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.

பேருந்தில் கிட்டத்தட்ட 60 பேர் இருந்ததாக சிந்து மாகாண காவல்துறை அதிகாரி குலாம் ஹைதர் ஜமாலி தெரிவித்தார். துப்பாக்கி ஏந்திய 6 பயங்கரவாதிகள் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் ஈடுப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கராச்சி நகரின் காவல் கண்காணிப்பாளர் நஜீப் கானும், பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் 41 பேர் கொல்லப்பட்டதாக உறுதி செய்துள்ளார்.

சம்பவ பகுதியை பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளனர். தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளுடன் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்