நாளை கந்தளாயை நோக்கிச் செல்கிறது ஒற்றுமைப் பயணம்

நாளை கந்தளாயை நோக்கிச் செல்கிறது ஒற்றுமைப் பயணம்

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2015 | 9:03 pm

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஒற்றுமைப் பயணம் இன்று 18 ஆவது நகரை சென்றடைந்தது.

40 நாட்கள் கொண்ட இந்தப் பயணத்தை சக்தி, சிரச, நியூஸ்பெஸ்ட், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் கொழும்பு துறைமுக நகரம் ஆகியன ஏற்பாடு
செய்துள்ளன.

தேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமைப் பயணத்தின் இன்றைய பயணம் ஆரம்பமாவதற்கு முன்னர் முல்லைத்தீவில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

முல்லைத்தீவு ஜூம்மா முஸ்லிம் பள்ளிவாசலிலும் மத அனுஷ்டானங்கள் இடம்பெற்றன.

சகவாழ்வு என்ற தகவலைக் கொண்டு கிராமங்கள் மற்றும் நகரங்கள் தோறும் பயணிக்கும் ஒற்றுமைப் பயணத்தின் இன்றைய பயணம், முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு முன்னால் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஆரம்பமானது.

ஆறு நாட்களாக வட பகுதியில் பயணித்த ஒற்றுமைப் பயணம் இன்று பகல் நெடுங்கேணியை சென்றடைந்த சந்தர்ப்பத்தில், வரவேற்பு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நெடுங்கேணியைக் கடந்து சென்ற ஒற்றுமைப் பயணம், வட மாகாணத்தைக் கடந்து, வடமத்திய மாகாணத்திற்குள் பிரவேசித்தது.

முதலாவதாக பராக்ரமபுர நகரத்தைச் சென்றடைந்தது.

இந்தப் பயணத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் வகையில் பராக்ரமபுரவில் நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எதிர்கால அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு இலங்கையர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் இந்த ஒற்றுமைப் பயணம், நாளை பதவிய – ஹொரொவ்பத்தான ஊடாக கந்தளாயை நோக்கிப் பயணிக்கவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்