திக்வெல்லயில் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நிர்மாண நடவடிக்கைகள்

திக்வெல்லயில் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நிர்மாண நடவடிக்கைகள்

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2015 | 10:01 pm

திக்வெல்ல, பெலிவத்த, கடபல பிரதேசத்தில் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், கடற்கரையோரத்தில் நிர்மாண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக திக்வெல்ல பிரதேச சபை கூட்டத்தில் இன்று கவனம் செலுத்தப்பட்டது.

இந்த நிர்மாணப்பணிகள் தொடர்பில் கடற்பாதுகாப்புத் திணைக்களத்திடம் ஆராய்ந்து, சபைக்கு அறிவிக்க வேண்டும் என பிரதேச சபைத் தலைவர் இதன்போது கூறினார்.

திக்வெல்ல, பெலிவத்த, கடபல பிரதேசத்தின் கடற்கரையோரத்தில் தற்போது கற்கள் போடப்பட்டு வருகின்றன.

பிரதேச சபையின் அனுமதியின்றி ஹோட்டலொன்றின் நீச்சல் தடாகத்தை பாதுகாப்பதற்காக இந்த நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படுவதாக திக்வெல்ல பிரதேச சபைத் தலைவர் தெரிவித்தார்.

தொலைபேசியூடாக திக்வெல்ல பிரதேச சபைத் தலைவர் கிஷாலி முதுகுராமன தெரிவித்ததாவது;

[quote]திக்வெல்ல பிரதேச சபைக் கூட்டம் இன்று இடம்பெற்றது. இதன்போது பெலிவத்த பகுதியில் இடம்பெறும் நிர்மாணத்திற்கான அனுமதியை நாம் வழங்கவில்லை என பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கூறினார். இது கடற்பகுதியில் முன்னெடுக்கப்படும் நிர்மாணம் என்பதால் கடற்பாதுகாப்புத் திணைக்களமே அனுமதியைப் பெற்றுக்கொடுக்க தலையீடு செய்திருக்க வேண்டும். இது தொடர்பில் கடற்பாதுகாப்பு திணைக்களத்திடம் ஆராய்ந்து அடுத்த சபை அமர்வில் பதிலளிக்குமாறு நான் பிரதேச சபை உறுப்பினருக்கு கூறினேன்.[/quote]

என்றார்.

 

தனிப்பட்ட காரணத்திற்காக கடற்பகுதியில் எவ்வித அபிவிருத்தி நடவடிக்கைகளையோ
நிர்மாணப்பணிகளையோ முன்னெடுப்பதற்கு சட்டத்தில் இடமில்லை.

இது தொடர்பில் நியூஸ்பெஸ்ட் ஆராய்ந்த போது, அரசியல்வாதி ஒருவரின் உறவினருக்கே இந்த ஹோட்டல் சொந்தமானது என அறியக்கிடைத்தது.

இந்த நிர்மாணப் பணிகளுக்கு கடற்பாதுகாப்பு திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதா?

அதன் பின்புலத்தில் யார் உள்ளனர்?

 

இது தொடர்பான தகவல்கள் உங்களிடம் இருந்தால், உங்களது தகவல்களை பதிவேற்றுங்கள்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்