தமிழக மீனவர்கள் 37 பேரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

தமிழக மீனவர்கள் 37 பேரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

தமிழக மீனவர்கள் 37 பேரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

13 May, 2015 | 1:14 pm

தமிழக மீனவர்கள் 37 பேரை இம்மாதம் 27 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.

மீனவர்கள் இன்று (13) முற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர் சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று (12) நடைபெற்ற சந்திப்பின்போது குறித்த 37 மீனவர்களையும் விரைவில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்