சிலாபத்தில் பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய்; ஒருவயது குழந்தை உயிரிழப்பு

சிலாபத்தில் பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய்; ஒருவயது குழந்தை உயிரிழப்பு

சிலாபத்தில் பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய்; ஒருவயது குழந்தை உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

13 May, 2015 | 1:01 pm

சிலாபம் கொஸ்வத்தை பகுதியில் தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் கிணற்றினுள் குதித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் ஒருவயது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கிணற்றினுள் இருந்து காப்பாற்றப்பட்ட தாயும் ஏழு வயது சிறுவனும் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

நேற்று (12) நள்ளிரவு குறித்த தாய் தனது இரண்டு பிள்ளைகளுடன் கிணற்றினுள் குதித்துள்ளார்.

எவ்வாறாயினும் இதற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்