கோட்டாபயவின் மனு மீதான விசாரணையிலிருந்து நீதியரசர் ஒருவர் விலகல்

கோட்டாபயவின் மனு மீதான விசாரணையிலிருந்து நீதியரசர் ஒருவர் விலகல்

கோட்டாபயவின் மனு மீதான விசாரணையிலிருந்து நீதியரசர் ஒருவர் விலகல்

எழுத்தாளர் Staff Writer

13 May, 2015 | 12:46 pm

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் அடிப்படை உரிமை மனுவை பரிசீலனை செய்யும் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமில் இருந்து விலகுவதாக உயர்நீதிமன்ற நீதியரசர் புவனெக்க அளுவிஹாரே இன்று (13) அறிவித்துள்ளார்.

தாம் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

நீதியரசர் புவனெக்க அளுவிஹாரே தமது முடிவை பிரதம நீதியரசருக்கு அறிவிக்க வேண்டும் என கோட்டாபய ராஜபக்ஸ சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரோமேஷ் டி சில்வா இன்று (13) கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், , நீதியரசர் சரத் டி ஆப்ரூவுடன் இணைந்து மனுவை தாம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதாக நீதியரசர்கள் குழாமின் தலைவர் ஈவா வனசுந்தர உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்