குடும்ப அரசியல் நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்டுள்ளது – சஜித் பிரேமதாச

குடும்ப அரசியல் நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்டுள்ளது – சஜித் பிரேமதாச

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2015 | 7:38 pm

குடும்ப அரசியல்  நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சூரியவெவ தேசிய பாடசாலையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது;

[quote]அன்று சட்டமொன்று இருக்கவில்லை. காட்டுச்சட்டமே காணப்பட்டது. ஒரு குடும்பத்தின் கீழே சட்டம் காணப்பட்டது. அந்த குடும்பமே அனைத்து தீர்மானங்களையும் எடுக்கும். எது சரி, எது தவறு என அவர்களே தீர்மானி்ப்பார்கள். நீதிமன்றம், பாராளுமன்றம், மாகாண சபை என முழு நாட்டையும் குடும்பமே ஆட்சி செய்தது. எனினும், தற்போது அந்த குடும்ப அரசியல் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.[/quote]

என்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்