20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஜனாதிபதி  தலைமையில் இன்று

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இன்று

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இன்று

எழுத்தாளர் Staff Writer

11 May, 2015 | 8:46 am

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலுக்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் நான்கு மணிக்கு இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக தமது நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாக நவ சமசமாஜ கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண கூறியுள்ளார்.

இதேவேளை, தேர்தல் முறையில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதியுடன் அரசியல் கட்சிகள் சிலவற்றின் பிரதிநிதிகள் நேற்று கலந்துரையாடியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடுவதற்கு இன்று சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரியிருந்தாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்