மோட்டார் வாகனங்கள்,வீடுகள் விற்பனை செய்யும் போது விலையை காட்சிபடுத்த வேண்டியது காட்டாயம்

மோட்டார் வாகனங்கள்,வீடுகள் விற்பனை செய்யும் போது விலையை காட்சிபடுத்த வேண்டியது காட்டாயம்

மோட்டார் வாகனங்கள்,வீடுகள் விற்பனை செய்யும் போது விலையை காட்சிபடுத்த வேண்டியது காட்டாயம்

எழுத்தாளர் Staff Writer

11 May, 2015 | 4:32 pm

மோட்டார் வாகனங்கள் மற்றும் வீடுகளை விற்பனை செய்யும்போது விலையை காட்சிபடுத்த வேண்டியது காட்டாயம் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தின் 26 ஆவது சரத்துக்கு அமைய அனைத்து பொருட்களினதும் விற்பனை விலையை காட்சிபடுத்த வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காட்சியறைகளில் விற்பனைக்கு வகைக்கப்பட்டுள்ள வாகனங்களின் விலை காட்சிபடுத்தப்படாமையால் தாம் சிரமத்தை எதிர்நோக்குவதாக மக்கள் முறைப்பாடு செய்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய விலையை காட்சிபடுத்தாது விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் மற்றும் வீடுகளை கண்டுபிடிப்பதற்கான சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்