மகனுக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் ஒரு தாயின் உள்ளக் குமுறல்

மகனுக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் ஒரு தாயின் உள்ளக் குமுறல்

எழுத்தாளர் Staff Writer

11 May, 2015 | 9:18 pm

கடந்த கால போர் சூழலில் தமது பிள்ளைகளை உயிருடன் தொலைத்து விட்டு அவர்களை தேடி நடைப்பிணங்களாக அலையும் அன்னையர்கள் இன்றும் எம் மத்தியில் வாழ்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

யுத்தத்தின் கோரப் பிடியில் சிக்குண்ட பல குடும்பங்களில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு திம்பிலி பகுதியில் வசிக்கும் மகேஷ்வரியின் குடும்பமும் ஒன்று.

இறுதிக்கட்ட போரின் போது இவர்களது சொந்த இடமான முள்ளிவாய்க்காலில் இருந்து இடம்பெயர்ந்து செல்லுகையில் எரிகணை வீச்சில் சிக்குண்டு மகேஷ்வரியின் கணவர் அதே இடத்தில் உயிரிழந்தார்.

கணவரின் இறுதிக்கிரியையை கூட செய்யாது பிணங்களுக்கு மத்தியில் கணவரின் உயிரற்ற உடலையும் போட்டு விட்டு தமது பிள்ளைகளின் உயிரை பாதுபாப்பதற்காக வட்டுவாகல் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளார்.

இதன் போது தனது மகனை விசாரணைக்கு என இராணுவம் அழைத்து சென்றதாக மகேஷ்வரி கூறுகின்றார்.

விசாரணைக்கு என அழைத்து சென்ற தனது மகன் இன்று வரை வீடு திரும்ப வில்லை என அழுது புலம்புகிறார் மகேஷ்வரி.

மகனையும் பறிகொடுத்து அநாதரவான நிலையில் சொந்த இடத்திற்கும் செல்ல முடியாது பெரும் சோகத்திற்கு மத்தியில்வாழ்கின்றார் மகேஷ்வரி.

எனவே தற்காலிக இடத்தில் எஞ்சிய உயிரை கையில் பிடித்துக்கொண்டு மகனுக்காக காத்திருக்கும் இந்த தாய்க்கு நீதி கிடைக்குமா?


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்