நவுஸர் பௌஸியை கைது செய்யுமாறு உத்தரவு

நவுஸர் பௌஸியை கைது செய்யுமாறு உத்தரவு

நவுஸர் பௌஸியை கைது செய்யுமாறு உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

11 May, 2015 | 3:09 pm

மேல் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் நவுஸர் பௌஸியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இன்று உத்தரவு பிறப்பிடத்துள்ளார்.

மூன்று வருடங்களுக்கு முன்னதாக வர்த்தகர் ஒருவர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையொன்றை பரிசீலித்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பில் நீதவான் இதன்போது அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

நவுஸர் பௌஸியை கைது செய்வதற்காக சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியபோதிலும் அந்த ஆலோசனைகள் கிடைக்கவில்லை என பொலிஸார் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

இதன் காரணமாகவே மேல் மாகாண சபை உறுப்பினரை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒருவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றபோது அதுகுறித்து ஆராய்ந்து சந்தேகநபரை கைது செய்வதற்கு சட்டமாஅதிபரின் அலோசனை கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என பொலிஸாருக்கு நீதவான் அறிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்