தமிழக மீனவர்களின் கோரிக்கைகள் இலங்கை மீனவ சங்க பிரதிநிதிகள் குழுவினரால் நிராகரிப்பு

தமிழக மீனவர்களின் கோரிக்கைகள் இலங்கை மீனவ சங்க பிரதிநிதிகள் குழுவினரால் நிராகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

11 May, 2015 | 9:31 pm

தமிழக மீனவர்களினால் முன்வைக்கப்பட்டிருந்த 6 அம்சக் கோரிக்கைகளும் இலங்கை மீனவ சங்க பிரதிநிதிகள் குழுவினரால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இலங்கை கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சில் இன்று (11) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை இந்திய மீனவப் பிரதிநிதிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்றது.

அதன்போது இலங்கை மீனவர்களிடம் தமிழக மீனவர்கள் சார்பில் 6 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

ஓராண்டு காலத்தில் இலங்கை கடற்பகுதிக்குள் 83 நாட்களுக்கு மீன்பிடிப்பதற்கான அனுமதியை தமிழக மீனவர்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட  6 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்தக் கோரிக்கைகள் குறித்து இலங்கை மீனவப் பிரதிநிதிகள், அரசாங்கம், வடகிழக்கு மீன்பிடி சங்கங்கள் மற்றும் மீனவ அமைப்புக்கிடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதுடன்
கடந்த வாரம் மாவட்ட அமைப்புக்களுடைய கூட்டங்களைக் கூட்டி இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்